உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா

விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா மிகவும் சிறப்பாக நடந்தது.

விழாவை முன்னிட்டு திருச்சபையில் நடராஜபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷேகமும், நடராஜபெருமான் லிங்கத்தில் எழுந்தருளி பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அருளுதலும்,  பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் தியாகராஜர்கோவிலுக்கு செல்லுதலும், காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, தியாகேச பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவாதிரை நாளில் பதஞ்சலி வியாக்கரபாத முனிவர்களுக்கு தியா கேசப் பெருமான் காட்சி அருள்வது இடது பாத தரிசனம் ஆகும். இறைவன் அர்த்த நாரீஸ்வரராக இருக்கும் போது இடது பாகம் தியின் பாதம் ஆனதால் இட து பாத தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !