உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம் : ஆங்கில புத்தாண்டு பலன் 2021

மகரம் : ஆங்கில புத்தாண்டு பலன் 2021

உத்திராடம் 2, 3, 4ம் பாதம் :  நீதி. நேர்மையுடன் செயல்படுவீ்ர்கள். அலைச்சல் சற்று குறையும். வெளியூர் பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாய்ப்புண்டு. செலவு குறையும். சேமிப்பு உயரும். கடன் பிரச்னை முடிவிற்கு வராமல் இழுபறி நீடிக்கும். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். மாணவர்கள் தேர்வு நேரத்தில் அவசரப்படாமல் விடையளிப்பது அவசியம். தோலில் உண்டாகும் மாறுபாட்டை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பணியாளர்கள் அலுவலகத்தில் கீழ்நிலை பணியாளர்களின் ஆலோசனையை ஏற்பர். சுயதொழில் செய்வோர் கடும் உழைப்பால் முன்னேற்றம் காண்பர். உழைப்பால் உயர்வு பெறும் ஆண்டு இது.

திருவோணம் :  அதிகம் பேசாமல் அமைதியாக நினைத்ததை செய்வீர்கள். விட்டு கொடுத்து செல்லும் மனநிலை உருவாகும். வரவிற்கு ஏற்ப செலவும் காத்து நிற்கும். சகோதரருக்கு உதவும் நிலை வரலாம்.  மாணவர்கள் தேர்வில் விடையை  தேர்ந்தெடுப்பதில் குழப்பத்தை சந்திப்பர். பெண்கள் கணவருக்கு உறுதுணையாக நிற்பர்.  குடும்ப விசேஷங்களில் பிறரை நம்பாமல் தனித்து செயல்படுவீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வெளிநாட்டு பணிக்காக காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக அமையும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. நிதானமுடன் செயல்பட வேண்டிய ஆண்டு இது.

அவிட்டம் 1, 2ம் பாதம் : மற்றவர் பிரச்னையில் தலையிட வேண்டாம். நீண்ட துார பயணம் செல்ல வாய்ப்புண்டு. பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் மனநிலையை அறிந்து செயல்படுவது நல்லது. நீண்ட நாள் கடன் பிரச்னை தீரும். சொன்ன சொல்லை காப்பாற்ற சிரமப்பட நேரிடும். மாணவர்களின் மனப்பாட திறன் உயர்வடையும். தேர்வில் கேள்விகளை புரிந்து விடையளிப்பது அவசியம். மாற்ற மொழி பேசும் நபரிடம் ஏமாற வாய்ப்புண்டு. அஜீரணம் கோளாறு அதிகரிக்கும். பணியாளர்கள் அலுவலகத்தில் உங்கள் வேகத்திற்கு ஒத்துழைப்பர். சுயதொழில் செய்வோருக்கு அலைச்சலுடன் லாபம் சேரும். நன்மை தரும் ஆண்டு இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !