பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED :1852 days ago
நத்தம்: நத்தம் அருகே மணக்காட்டூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் சபரிமலை பாதயாத்திரை பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை நடந்தது. ஐயப்பனுக்கு அபிஷேக தீபாராதனையும், சுவாமிக்கு 16 வகை அபிஷேகமும் நடந்தது. அய்யனார் தீர்த்தம்அழைத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இருமுடி கட்டி, இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐயப்பன் ரத வீதியுலா கோயில் முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. பின்னர் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.