காரைக்கால் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை
ADDED :1738 days ago
காரைக்கால்: ஆங்கில புத்தாண்டையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில், அம்பகரத்துார் பத்ரகாளியம்மன், கோவில் பத்து கோதண்டராமர், நித்யர் கல்யாணப்பெருமாள், கைலாசநாதர் மற்றும் திருப்பட்டினம், கோட்டுச்சேரி கோவில்களில் நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியுடன் நள்ளிரவு பிராத்தனை நடந்தன.