திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1852 days ago
திருப்பரங்குன்றம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை முடிந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை முடிந்து தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.