சிவகங்கை மாவட்ட கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
பிள்ளையார்பட்டி : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மார்கழி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் விநாயகர் தங்கக் கவசத்திலும், உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது. போலீஸ் எஸ்.பி.ரோஹித் நாதன் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை சிவகங்கை காசிவிஸ்வநாத சுவாமி கோயில், சுந்தரராஜபெருமாள் கோயில், பிள்ளை வயல் காளியம்மன் கோயில், நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோயில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இளையான்குடிதாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு மதுரை,சிவகங்கை,விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோயில்,வீர அழகர் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் புத் தாண்டை ஒட்டி சாமி தரிசனம் செய்தனர்.காரைக்குடிகாரைக்குடியில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை, நடந்தது.கொப்புடையநாயகி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில், நகரச்சிவன் கோயில், செக்காலை சிவன்கோயில், முத்தாலம்மன் கோயில், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கோயில், சூடாமணிபுரம் ராகவேந்திரர் கோயில், உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தேவகோட்டைதேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்,கோதண்டராமஸ்வாமி,ரங்கநாதர் பெருமாள் கோவில், நவசக்தி விநாயகர் , நித்யகல்யாணி கைலாசநாதர் , புவனேஸ்வரி அம்மன் , காமாட்சியம்மன் , ஆலமரத்து முனீஸ்வரர் , கல்லாம்பிரம்பு காளியம்மன் அபிராமி அம்மன் மற்றும் அருகில் உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர், கோட்டூர் நயனார் வயல் அகத்தீஸ்வரர், கோட்டூர் மாரியம்மன் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.