உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை சஷ்டி: முருகனுக்கு பூஜை

தேய்பிறை சஷ்டி: முருகனுக்கு பூஜை

வீரபாண்டி: தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில், நேற்று நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தேய்பிறை சஷ்டியான நேற்று, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்களுக்கு, 16 வகையான மங்கல பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுப்பிரமணியருக்கு திருநீறு மற்றும் வள்ளி, தெய்வானை தாயார்களுக்கு மஞ்சள் காப்புடன், பட்டு வஸ்திரம் சார்த்தி, ராஜ அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், கந்தசஷ்டி கவச பாராயணம் செய்து வழிபட்டனர். இதே போல் வேலநத்தம் பாவடி முத்துக்குமாரசுவாமி கோவில், காளிப்பட்டி கந்தசாமி கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் சுப்பிரமணியர் ஆகியோருக்கு, அலங்கார பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !