மதுரை ராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவியார் ஜெயந்தி விழா
ADDED :1749 days ago
மதுரை : மதுரை ராமகிருஷ்ண மடத்தில் அன்னை சாரதாதேவியாரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மங்கள ஆரதி, வேத பாராயணம், நாமசங்கீர்த்தனம், சிறப்பு பஜன் நடந்தது. மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசியதாவது: ராமகிருஷ்ணர், சாரதாதேவி யாரின் வாழ்க்கை ஆன்மிகமயமாக இருந்தது. ராமகிருஷ்ண மடங்கள் உருவாக சாரதா தேவியார் காரணமாக இருந்தார். சேவைமயமான வாழ்க்கை வாழ்ந்தார். உலக வாழ்க்கையில் பற்று குறைய குறைய ஒருவர் மனஅமைதி பெறுகிறார். ஒருவர் வார்த்தையாலும் பிறரை துன்புறுத்த கூடாது. வாழ்வில் துன்பங்கள் ஏற்படுகின்றன. அவை நிலைத்திருக்காது. ஓடும் நீரை போன்று ஓடி மறைந்து விடும் என சாரதாதேவியார் கூறியுள்ளார், என்றார்.