அன்னுார் ஐயப்பன் கோவிலில் 51வது ஆண்டு விழா
ADDED :2023 days ago
அன்னுார்: அன்னுார், தென்னம்பாளையம் ரோடு, ஐயப்பன் கோவிலில், 51 ஆண்டு விழா நேற்று நடந்தது.அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து, பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால், ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 11:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டனர்.மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஐயப்ப சுவாமி, கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து, அருள்பாலித்தார். நிர்வாகக்குழு தலைவர் வெங்கடாசலம், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரவீன், அம்பாள் நந்தகுமார் உட்பட திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.