உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமநாதர் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

சோமநாதர் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

மானாமதுரை, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர்கோயிலில் உலக ஜீவராசிகளுக்குசிவன் பார்வதி சுவாமி படியளக்கும் லீலை கொண்டாடப்பட்டது.


சிவன் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி தேய்பிறைஅஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நேற்று மார்கழி அஷ்டமி திதி என்பதால் அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிக்குப்பின் ஆனந்தவல்லி,சோமநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்யப்பட்டு ரிஷப வாகனத்தில் சோமநாதர் பிரியாவிடையுடனும், ஆனந்தவல்லி அம்பாள் சிறப்புஅலங்காரத்துடன் திருமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அஷ்டமிசப்பரத்தில் ஆனந்தவல்லியும், சோமநாதசுவாமி பிரியாவிடையும் தனித்தனி சப்பரங்களில்எழுந்தருளி உலா வந்த போது பக்தர்கள் ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் வகையில்அரிசி, நவதானியங்களை துாவியபடி சென்றனர். பலர் இதனை பிரசாதமாக எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !