ஜன., 10ல் காஞ்சி மகா பெரியவர் ஆராதனை
ADDED :1835 days ago
மதுரை: காஞ்சி காமகோடி மடத்தில், மகா பெரியவர் ஆராதனை விழா ஜன., 10ல் நடக்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மடத்தின் இணையதளத்தில், தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.அதில் குறிப்பிடப் பட்டு உள்ள நேரத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக, ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.இந்த தகவலை, காஞ்சி மடம் தெரிவித்துள்ளது.