உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா

வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா

தொட்டியம்: தொட்டியம் யூனியன் திருநாராயணபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற வைஷ்ணவ தலமான வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் கோவிலின் வைகாசி திருவிழா துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் துவக்க விழா நேற்று மாலை அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தது. இன்று (31ம் தேதி) முதல் காலையிலும், இரவிலும் எம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் வீதிஉலா வருகின்றார். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் எட்டாம் தேதி காலை 9.30 மணி அளவில் உபயநாச்சியாருடன் திருத்தேரில் எழுந்தருள உள்ளார். அதையடுத்து 10ம் தேதி புஷ்பம் ஆகும் பல்லாக்குடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் சித்ரா, செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன், பட்டாச்சாரியார் திருவேங்கடம் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !