உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :1769 days ago
உடுமலை: உடுமலை, தில்லை நகரில் ரத்தினலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில், பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. ரத்தினாம்பிகை அம்பாள் மற்றும் ரத்தினலிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கும், நந்திபகவானுக்கும், பால், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளுக்கு தீபாராதனை இடம்பெற்றது. வால்பாறைவால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று மார்கழி மாத இரண்டாவது பிரதோஷ பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. புத்தாண்டில் நடந்த முதல் பிரதோஷ பூஜையில், கலந்து கொண்ட பக்தர்கள் தரிசித்து சென்றனர்.