காஞ்சி மஹா பெரியவர் பாதுகை தரிசனம்
ADDED :1769 days ago
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த சமாஜம் சார்பில், ஸ்ரீமஹாபெரியவாளின் 27வது வார்ஷீக ஆராதனை ம ேஹாத்ஸவம், திருப்பூர் ஓடக்காடு காவேரி வீதியில் உள்ள ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நேற்று நடந்தது.இதில், ஸ்ரீ மஹாபெரியவர் மற்றும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகை தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பாதுகை தரிசனம் செய்தனர்.பாபநாசம் லலிதா தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த சமாஜம் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.