வல்லப கணபதிக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :2031 days ago
புதுச்சேரி: மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வல்லபகணபதி அருள்பாலித்தார். முத்திரைப்பாளையம், தனபால் நகரில் உள்ள வல்லபகணபதி கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் அபிஷேகம், மாலையில் படையல், சிறப்பு ஆராதனைகள் நடந்து வருகின்றது. நேற்று சிறப்பு அலங்காரத்தில் வல்லபகணபதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.