உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி முனியப்பன் கோவிலில் 30 கிடாய் வெட்டிய விவசாயிகள்

மழை வேண்டி முனியப்பன் கோவிலில் 30 கிடாய் வெட்டிய விவசாயிகள்

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி முனியப்பன் சுவாமி கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் கிடாய்கள் வெட்டி ஆடிப்படையல் திருவிழா அன்னதானம் நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து அய்யாபட்டி,செடிபட்டி, வேம்பார்பட்டி, கோம்பைப்பட்டி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 30 கிடாய்களை மற்றும் சேவல்களையும் மழை வேண்டி முனியப்பனுக்கு காணிக்கையாக வழங்கினர். தொடர்ந்து கோவில் முன் கிடாய்கள் வெட்டப்பட்டு நள்ளிரவில் சாதம், ஆட்டுகறி, கோழிக்கறி தயார் செய்யப்பட்டது. பின்னர் இன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அவர்களுக்கு கறி விருந்து பரிமாறபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !