முத்தங்கி சேவையில் ஆண்டாள் ஸ்ரீவி., ஆண்டாள்
ADDED :1770 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவத்தின் 4ம் நாளில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவம் நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் ஆண்டாள் வெவ்வேறு அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு எண்ணெய்காப்பு உற்ஸவத்தில் பங்கேற்கிறார். உற்ஸவத்தின் 4ம் நாளில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். தை மாதபிறப்பான ஜன.14 அன்று மணவாளமாமுனிகள் மங்களாசாசனம், ஜன.15 அன்றுகனு வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்கின்றனர்.