அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2099 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்டவற்றுக்கு, தேன், பால், பஞ்சாமிர்தம், மஞ்சள், அரிசி பொடி, தயிர், இளநீர், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.