உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை முத்துமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்

வால்பாறை முத்துமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்

 வால்பாறை: வால்பாறை, கெஜமுடி முதல் பிரிவு டீ எஸ்டேட்டில் இங்குள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வேதபாராயணம், மூலமந்திரகாயத்திரி, அஸ்திர மந்திர ேஹாமம் நடந்தது.தொடர்ந்து, மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, யாத்ரா தானம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு கலசநீரை பக்தர்கள் ஏந்தி கோவிலை வலம் வந்தனர்.காலை,10:30 மணிக்கு, விமானகோபுர கலசத்திற்கு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !