உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம்

வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம்

பல்லடம்: அல்லாளபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

பல்லடம் அடுத்த அல்லாளபுரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நடந்த கணபதி, தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர், மற்றும் நவகிரக ஹோமங்களுடன் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. புடவை, வேஷ்டி, வளையல், இனிப்பு, பழங்கள், பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு சீர் வரிசைகள் எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, மாலை மாற்றுதல், மாங்கல்யம் கட்டுதல் உள்ளிட்ட சேவைகளுடன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். அனைவருக்கும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !