பஞ்சபூலிங்க அலங்காரத்தில் மூலவர் அருள்பாலிப்பு
ADDED :1763 days ago
கள்ளக்குறிச்சி; செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவர் பஞ்சபூத லிங்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மார்கழி மாதத்தையொட்டி கள்ளக்குறிச்சி சாமியார்மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவருக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது. மார்கழி மாத நான்காவது சோமவாரத்தையொட்டி, நேற்று காலை 5 மணிக்கு கோவில் பசுக்கள் கயிலை, நந்தினிக்கு கோ பூஜை நடந்தது. 6 மணிக்கு செம்பொற்சோதி நாதருக்கு மார்கழி மாத திருவெம்பாவை வழிபாடு நடந்தது.தொடர்ந்து வேள்வி வழிபாடு, திருக்குட நன்னீராட்டு, மகாஅபிேஷகம் செய்யப்பட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் பஞ்சபூத லிங்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கயிலை வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.மேலும் மாத சிவராத்திரியையொட்டி இரவு அபிேஷகம் நடந்தது.