பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை
ADDED :2067 days ago
கண்டாச்சிபுரம்; சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜை நடைபெற்றது.கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வரும் சோமவார பூஜைகள் நடைபெற்றன. காலை 11 மணிக்கு சகஸ்ரநாம பூஜையும், அதனைத் தொடர்ந்து உச்சிகால பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு நன்னீர் தீர்த் தப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.