சகுனம் பார்க்காதீர்
ADDED :1821 days ago
ஆந்தை அலறினால் நல்லதல்ல என்றும், நல்ல செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் மக்கள் கருதினர். பறவைகளை விரட்டியடித்து, அவை எந்த திசையில் பறக்கின்றனவோ அதைப் பொறுத்தும் நல்ல விஷயங்களைச் செய்யும் வழக்கமும் இருந்தது. இப்படி சகுனம் பார்க்கும் மூடப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். நல்லதைச் செய்ய நாள் பார்க்க வேண்டாம். அனைத்துக்கும் ஆதாரமாக இறைவன் இருக்கிறான். நேர்மையுடன் உழைக்கும் நோக்கம் கொண்டவர்களுக்கு இறைவனின் அருளால் எல்லாம் நல்லதாக அமையும்.