கொடியம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த கொடியம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள கொடியம் அகிலாண்டீஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28 ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி பகல் 11 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 8 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 30ம் தேதி பகல் 11 மணிக்கு நான்காம் காலமும், இரவு 8 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையும், பூர்ணாஹுதியும் நடந்தது. காலை 7.45 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் கொண்டு வரப்பட்டு காலை 8 மணிக்கு ராஜகோபுரம், மூலவர், அம்பாள் சன்னதி விமானங்களுக்கும், விநாயகர், முருகர், மஹாலக்ஷ்மி, ஐயப்பன், நவக்கிரக சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு மஹா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி அமைச்சர் ராஜவேலு, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.