உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமசிவன் கோவிலில் ஆண்டு விழா பூஜை

பரமசிவன் கோவிலில் ஆண்டு விழா பூஜை

 பொள்ளாச்சி: நெகமம், கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில் கோவம்ச பண்டாரத்தார் நலச்சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழா பூஜைகள் நடந்தது.நெகமம் அருகே, கப்பளாங்கரையில், கோவம்ச பண்டாரத்தார் நலச்சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழா பூஜைகள், பரமசிவன் கோவிலில் நேற்றுமுன்தினம் நடந்தது. காலை, 7:30 - 8:30 மணிக்கு, கோவிலில், திருவிளக்கு ஏற்றுதல், மூத்தபிள்ளையார் வழிபாடு, குழந்தையானந்தர் வழிபாடு, கோமாதா வழிபாடு, குடும்ப நல வேள்வி மற்றும் அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !