உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய் பைரவர் ஐந்தாம் ஆண்டு விழா

சீரடி சாய் பைரவர் ஐந்தாம் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செல்வபுரம் சீரடி சாய் பைரவர் தியான பீடத்தில், இம்மாதம், 24ம் தேதி ஐந்தாம் ஆண்டு விழா நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு, ஷீலா செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். சென்னை விபூதி சித்தர் சாய் பாத மெய்யடிமை சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், ஸ்வர்ண ஆகாச பைரவர் ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம், கோபூஜை, தட்சிணாமூர்த்தி ஹோமம் உள்ளிட்டவை நடக்கின்றன. காலை, 8.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து, நீலகிரி வாழ் மக்களின் சாய் பஜன் மற்றும் படுகா நடனம் நடக்கிறது. மதியம் கலச பூஜையை தொடர்ந்து, பகல் ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது. மாலை, 4.30 மணிக்கு பல்லக்கு ஊர்வலம், 6.00 மணிக்கு ஆரத்தி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், சீரடி சாய் பைரவர் தியான பீடம் சாய் செந்தில்குமார் தலைமையில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !