ஏகாம்பரநாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ஈரோடு: ஈரோடு, கொல்லங்கோவில், தாண்டாம்பாளையம் காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரநாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் நடக்கிறது. அதை முன்னிட்டு, 29ம் தேதி காலை மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால வேள்வி துவங்கி நடந்தது. நேற்று காலை விநாயகர் பூஜை, இரண்டாம் கால வேள்வி, விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்தல், மூன்றாம் கால வேள்வி, மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்தல், யந்த்ர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடந்தது. இன்று காலை, 3.30 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, ஆலயம் வலம் வருதல் நடக்கிறது. காலை, 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பரிவார விமானங்கள், காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரநாதர் விமானம், மூலவர் விக்ரஹகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு காமாட்சி அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இரவு 8 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது.