மாரியம்மன் கோவில் புதிய தேர் வீதியுலா
ADDED :4878 days ago
மோகனூர்: எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள்பெற்றுச் சென்றனர். ப.வேலூர் அருகே எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவில் தேர் பழுதடைந்ததால், புதிதாக தேர் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதையடுத்து, பெரும் பொருட் செலவில், 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தேர் வெள்ளோட்டம், நேற்று காலை 7.30 மணிக்கு யாக வேள்வியுடன் துவங்கியது.தொடர்ந்து, திருத்தேர் வீதி உலா வந்தது. திருத்தேர் உலாவில், கோவிலுக்கு பாத்தியப்பட்ட, 18 பட்டி கிராம மக்கள் பங்கேற்று ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர்.