உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் சூரசம்ஹாரம் லீலை

திருப்பரங்குன்றம் கோயிலில் சூரசம்ஹாரம் லீலை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா முக்கிய நிகழ்வாக நேற்றுமுன்தினம் இரவு கோயிலுக்குள் சூரசம் ஹாரம் லீலை நடந்தது. சிம்மாசனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வீரபாகு தேவர், சூரபத்மன் கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து கையில் வாள் ஏந்தி சிவாச்சார்யார் சூரசம்ஹார புராணக் கதையை கூறினார்.சிறப்பு தீபாராதனை முடிந்து சுவாமி கோயிலுக்குள் சேர்த்தினார்.வழக்கமாக இந்நிகழ்ச்சி சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் நடக்கும். கொரோனா தடையுத் தரவால் இந்தாண்டு கோயிலுக்குள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !