திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை
ADDED :1826 days ago
திருவட்டாறு: ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 76 வது தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புகேரள மாநிலம் பத்தனம்திட்டா வனப்பகுதியில் இருந்து 72 அடிநீளமுள்ள தேக்குமரம் கொடிமரத்துக்காக திருவட்டாறுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 69 அடி கொடிமரமாக மெருகேற்றப்பட்ட தேக்கு மரம், அப்போது முதல் எண்ணெய் தோணியில் போடப்பட்டிருந்தது. இந்த கொடிமரம் பிரதிஷ்டை நேற்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்றது. சிறப்பு பூஜை, சடங்குகள் நடைபெற்ற பின்னர் இரு ராட்சத கிரேன் மூலம் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.