உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவில் கட்டுமானப் பணி: தங்கவயலில் ரூ.25 லட்சம் இலக்கு

ராமர் கோவில் கட்டுமானப் பணி: தங்கவயலில் ரூ.25 லட்சம் இலக்கு

தங்கவயல்:அயோத்தியில் ராமர் கட்டுவதற்கு, தங்கவயல் தொகுதியில் இருந்து, 25 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்படும், என, வி.ெஹச்.பி., செயலர் கோவி திருவரங்கம் தெரிவித்தார்.

தங்கவயலில் நேற்று அவர் அளித்த பேட்டி:ராமர் கோவில் பணிக்கு, அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என்பதால், 10, 100, 500, 1,000, 2,000 ரூபாய்க்கான ரசீது வழங்கப்படுகிறது.தங்கவயல் நகர பகுதியில் பா.ஜ., தலைவர் கமல் நாதன்; கிராமப்பகுதியில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி தலைமையிலும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.

தங்கவயல் தொகுதி வி.ெஹச்.பி., என்ற, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்ரீ தர்ம ராவ் சிந்தியா, செயலர் திருவரங்கம், மாவட்ட செயலர் கணேஷ்; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் தத்தா, செயலர் பிரவீன் ஆகியோர் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தங்கவயல் கிராமப்பகுதியில், 15 லட்சம் ரூபாய்; நகர பகுதியில், 10 லட்சம் ரூபாயும் வசூலித்து அயோத்திக்கு அனுப்பப்படும். இது தவிர, தங்கவயல் விஸ்வ கர்மா, ஜெயின் சங்கம், முதலியார் சங்கம் உட்பட பல ஹிந்து அமைப்புகள், கோவில் அறக்கட்டளைகள் ஆன்லைன் மூலம் ராமர் கோவில் அறக்கட்டளைக்குபணம் செலுத்துகின்றனர்.தங்கவயலில் உள்ள அனைவருமே, ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நன்கொடை அளிக்குமாறு கோருகின்றோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !