உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குமர சுவாமி கோவில் தேர் திருவிழா

முத்துக்குமர சுவாமி கோவில் தேர் திருவிழா

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை முத்துக்குமர சுவாமி கோவிலில் தேர் திருவிழா நடந்தது. தைப்பூச பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று நடந்த தேர் திருவிழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, விநாயகர், முத்துக்குமர சுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனியாக மூன்று தேர்களில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு செட்டித்தெரு, வண்டிக்காரத் தெரு, சஞ்சீவிராயர் கோவில் தெரு, கச்சேரி தெரு வழியாக கோவிலை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !