கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்ப திருவிழா
ADDED :1819 days ago
சென்னை -மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்பத் திருவிழா இன்று துவங்குகிறது.சென்னை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், தைபூசத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது.இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா, இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. தெப்பத் திருவிழாவின் முதல் நாளான இன்று, இரவு, 7:00 மணிக்கு, சந்திரசேகர சுவாமி தெப்பத்தில் அருள்பாலிக்கிறார். வரும், 29,30 ஆகிய நாட்கள், இரவு, 7:00 மணிக்கு சிங்காரவேலர் தெப்பத் திருவிழா நடக்கிறது. இவ்விழாவை, http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற இணைய தளம் மூலம், நேரலையாக கண்டு ரசிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைக் கமிஷனர் காவேரி செய்துள்ளார்.