உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூர் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா

கூடலூர் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா

கூடலூர்: கூடலூர், குசுமகிரி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு கணபதி ஹோமம்; 7:30 மணிக்கு கொடியேற்றுதல்; 7:45 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல்; 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 1:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு கோவிலை சுற்றி தேர் ஊர்வலம் நடந்தது. ஓவேலி சந்தனமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தது. அதே போன்று கிராமங்களில் உள்ள முருகன் கோவிலிலும் தைப்பூச திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !