வல்லவருக்கு நகமும் ஆயுதம்
ADDED :4880 days ago
கஜாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். விண்ணில் இருக்கும் அண்டத்தை காலால் உதைத்தான். அண்டச்சுவர் உடைந்து ஆகாசகங்கை பூலோகத்தை நோக்கி வந்தது. உயிர்கள் அனைத்தும் மரண பயத்தால் கலங்கின. தேவர்கள் விநாயகரிடம் சரணடைந்தனர். கஜாசுரனைக் கொல்ல ஆயத்தமானார் விநாயகர். முதலில் பூலோகத்தைக் காக்க, கால்பெருவிரல் நகத்தால் அண்டச்சுவரில் ஏற்பட்ட துளையை அடைத்தார். ஆகாச கங்கை தடைபட்டது. பின், கஜாசுரனை ஒரே நொடியில் வீழ்த்தினார். கலக்கம் தீர்ந்த தேவர்கள் விநாயகரை பூஜித்து மகிழ்ந்தனர். தேவர்களின் கலக்கம் தீர்த்த இவர் கலங்காமல் காத்த விநாயகர் என பெயர் பெற்றார். குரு தலமான ஆலங்குடியில் (திருவாரூர் மாவட்டம்) அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் மனக்கலக்கம், எதிரிபயம் நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.