ராமகிரி தேர் வெள்ளோட்டம்
ADDED :1748 days ago
குஜிலியம்பாறை : ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48வது நாள் மண்டல பூஜை நடந்தது.புதிய தேர் இரும்பு சக்கரங்கள் பொருத்தி, வெள்ளோட்டமாக கோயிலை சுற்றி வலம் வந்தனர். மாலையில் திருக்கல்யாணம், கருட வாகனத்தில் பெருமாள் ஊர்வலம், அன்னதானம் நடந்தது. கோயில் தலைவர்கருப்பணன், செயலாளர் வீரப்பன், செயல் அலுவலர் மகேஸ்வரி, அர்ச்சகர்கள் ராமகிருஷ் ணன், ரமேஷ்,மணியகாரர் ராஜலிங்கம் உள்பட பக்தர்கள் பங்கேற்றனர்.