கோயிலில் இசைக்கும் ராகம்
ADDED :4879 days ago
இசைக்கருவிகளில் நாதஸ்வரம் மிக முக்கியமானது. இதனை நாகஸ்வரம், நாயனம் என்றும் கூறுவர். ஆச்சா மரத்தால் செய்யப்படும் இதன் மேல்பாகம் உலோகத் தகட்டினால் மூடப்பட்டிருக்கும். திமிரி,பாரி என்று இருவித நாதஸ்வரங்கள் உண்டு. திமிரி, உயரம் குறைவாகவும், ஆதாரசுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி, அதிக உயரமும், ஆதாரசுருதி குறைவாகவும் இருக்கும்.கோயில்களில் பூஜைக்கு தக்கபடி ராகம் வாசிப்பர். காலை பள்ளியெழுச்சியின் போது பூபாளம், இரவு அர்த்த ஜாம பூஜையில் நீலாம்பரி, ஆனந்தபைரவி வாசிக்கப்படும்.இருமனம் இணையும் திருமண விழாவில் கெட்டிமேளம் கொட்டுவதில் நாதஸ்வரத்தின் பங்களிப்பு முக்கியமானது.