செல்வி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :2030 days ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் நகர் சலவை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செல்வி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் பெட்டி துாக்கி காந்தி சிலை,முருகன் கோயில் வழியாக செல்வி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின் பொங்கல் வைத்து வழிபட்டனர்.அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனை நடந்தது. 108 திருவிளக்கு பூஜை நடந்தது.