சக்தி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு பூமி பூஜை
ADDED :1753 days ago
பொள்ளாச்சி:கோதவாடி சக்திமாரியம்மன் கோவில் திருப்பணி பூமி பூஜையுடன் துவங்கியது.கிணத்துக்கடவு அருகே, கோதவாடியில் பழமையான சக்திமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புதுப்பிக்கும் வகையில், பழைய கோவில் கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கோவில் அமையவுள்ள, 20 சென்ட் நிலம், ஆலாங்காடு ஆறுசாமி, பழனிசாமி சகோதரர்களால் தானமாக வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து, நேற்று திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. கோவிலில் கருவறை, மகா மண்டபம் ஆகியன, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைய உள்ளதாக திருப்பணிக்குழு தெரிவித்தனர்.