உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபிஷேகம்!

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபிஷேகம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(ஜூன் 3) வைகாசி திருவிழாவை முன்னிட்டு, சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காலை 7 முதல் பகல் 2 மணி வரை பாலாபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பூ அங்கி அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி 30 நிமிடம் வசந்த உற்சவம் நடக்கிறது. பால்குட திருவிழா: நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் தலையில் சுமந்து வரும் பால், சுவாமிக்கு குடம் குடமாக காலை 7 மணி முதல் அபிஷேகம் செய்யப்படும். வழக்கமாக காலை 9 மணிக்கு பாலாபிஷேம் துவங்கும். பக்தர்களின் வசதிக்காக காலை 7 மணிக்கு துவங்குகிறது. ஆஸ்தான, சஷ்டி மண்டபம், லட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் குடிநீர் வசதி, அனைத்து மண்டபங்களிலும் தற்காலிக மின் விசிறிகள் அமைக்கப்படுகின்றன. நெரிசலை தவிர்க்க, விசாக கொறடு மண்டபத்தின் இருபுறமும் பக்தர்கள் சென்று பாலாபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவர், என நிர்வாகம் தெரிவித்தது. வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா: ஏராளமான பக்தர்கள் முகங்களில் 2 முதல் 32 அடி நீள வேல் குத்தி, பால்குடம் எடுத்து வருவர். கூட்டம் அதிகம் இருப்பதால், சன்னதி, பெரிய ரத வீதிகளில் மக்கள் நடக்க கூட இடம் இருக்காது. பெரியரதவீதி, கீழத்தெரு சந்திப்பு முதல், பஸ் ஸ்டாண்ட் வரையிலும், சன்னதி தெருவிலும் வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் தடை விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !