ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டும் குழு கூட்டம்
ADDED :1753 days ago
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூரில் குருஜி அறக்கட்டளை ஆசிரம வளாகத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான நன்கொடை வசூலிக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிதி திரட்டும் நிகழ்ச்சி அரகண்டநல்லூர் குருஜி அரக்கட்டளை ஆசிரம வளாகத்தில் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமையில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., சங்க நிர்வாகிகள் பாண்டுரங்கன், சீனுவாசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். ஆலோசனைக்குப் பின் நிதி திரட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் நிர்வாகிகள் லோகநாதன், ரமேஷ், கணேசன், மகாலிங்கம், மணவாளன், விஸ்வநாதன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.