விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :1753 days ago
புதுச்சேரி - லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள செல்வசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.செல்வசக்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வராஹி அம்மனுக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேக விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் உட்பட பலர் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.