யோகேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
ADDED :1753 days ago
காரைக்கால் - காரைக்கால் கோட்டுச்சேரி தென்கரை எம்.ஜி.ஆர்.,சாலையில் உள்ள யோகேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகபூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் காலம் பூஜைகள் முடிந்து யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10 மணிக்கு விமானங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது.இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் திருமுருகன், சந்திரப்பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓமலிங்கம், மாரிமுத்து, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம் உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.