விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காணிக்கை
ADDED :1752 days ago
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பில், 14 லட்சத்து 66 ஆயிரத்து 461 ரூபாய் காணிக்கை இருந்தது.விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், 14 லட்சத்து 66 ஆயிரத்து 461 ரூபாய், 10.500 கிராம் தங்கம், 95 கிராம் வெள்ளி இருந்தன.ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா உள்ளிட்ட கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.