உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குள்ளப்புரம் கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குள்ளப்புரம் கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேவதானப்பட்டி: குள்ளப்புரம் ஈசநாட்டுக்கள்ளர் சமுதாயத்திற்கு சொந்தமான கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்குள்ள விநாயகர், பாலமுருகன், கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் அனுக்ஞை, விக்னேஷ்வர் பூஜை, கும்ப அலங்காரம், முதற்கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது. இரண்டாம் கால யாகபூஜை, மூர்த்தி ஹோமங்கள், நூதன பிம்பசுத்தி, அபிஷேகம் நடந்தது. மங்கள இசையுடன் வேதபாராயணம், நான்காம் காலயாகபூஜை,நாடி சந்தானம் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முரளி சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியகுளம் ஒன்றியத் தலைவர் செல்லமுத்து, டி.எஸ்.பி., .உமா, தொழிலதிபர் அமரேசன், கோயிலாபுரம் நாட்டாமை கனகராஜ், கிராம கமிட்டி லட்சுமணன், அனைத்து சமுதாய பெரியோர்களும் கலந்து கொண்டனர். ஈசநாட்டுக்கள்ளர் இளைஞர் பேரவை மற்றும் குள்ளப்புரம் ஈசநாட்டுக் கள்ளர் சமுதாயத் தலைவர் வையாபுரி, துணைத் தலைவர் சென்றாயன், செயலாளர் ஆறுமுகம், துணைச் செயலாளர் ராஜாமணி, பொருளாளர் பிச்சைமணி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !