உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து யானையை கோயிலுக்கு அழைத்துவர மருத்துவக்குழுவினர்

குன்றத்து யானையை கோயிலுக்கு அழைத்துவர மருத்துவக்குழுவினர்

 திருப்பரங்குன்றம் : திருச்சி எம்.ஆர்., பாளையம் யானைகள் புத்துணர்வு மையத்திலுள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானையை கோயிலுக்கு அழைத்துவர நேற்று மருத்துவக்குழுவினர் புறப்பட்டனர்.

2015ல் யானை தெய்வானை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தது. 2020 மே மாதம் யானை தாக்கியதில் பாகன் இறந்தார். ஜூன் மாதம் யானை புத்துணர்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை, பயிற்சிகள் அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளது. யானை தெய்வானையை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அழைத்துவர கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி, கோயில் பணியாளர்கள், மருத்துவ குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர். இன்று அல்லது நாளை யானை கோயிலுக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !