திருநள்ளாறு சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1752 days ago
காரைக்கால்; திருநள்ளாறு சக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.காரைக்கால், திருநள்ளாறு, பேட்டை கிராமத்தில், தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவான் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது.அன்று, வினேஷ்வர பூஜையுடன் வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், யாகசாலை, சூரிய பூஜை நடந்தது. கும்பாபிேஷகத்தையொட்டி, நேற்று நான்காம் கால யாக சாலை முடிந்து, தீபாராதனை நடந்தது.புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியர்கள் சுமந்து சென்று கோபுர கலசங்களில் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.