உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்

மலைக்கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பழநி : பழநி மலைக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை தைப்பூச விழாவிற்கு பிறகும் தொடர்கிறது.

காவடிகள், பால்குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும், ஆட்டம் பாட்டத்துடன் சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று நாகப்பட்டினம், பலக்காடு பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக வந்தனர். அவர்கள் பூக்களால் வடிவமைக்கப்பட்ட ரதக்காவடியை எடுத்து வந்தனர். பாதவிநாயகர் கோயில் முன் காவடியாட்டம் ஆடி, கிரிவீதியில் வலம் வந்து மலைக்கோயில் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !