அம்மன் ஊஞ்சல் வழிபாடு
ADDED :1753 days ago
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி வடக்கு தெரு செல்வமுளைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இரண்டாம் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அம்மனை ஊஞ்சலில் வைத்து வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஆறுமுகம் தலைமையில் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.