உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!

அரியலூர் மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!

அரியலூர்: அரியலூர் பெரிய அரண்மனை தெருவில் பல நூறாண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட, ஸ்ரீ மகாசக்தி விநாயகர் கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்யும் பணி, திருப்பணிக்குழு தலைவர் முத்துவடிவேலு, துணை தலைவர் துரை அர்ச்சுணன் உள்ளிட்ட திருப்பணிக்குழு தலைமையில் கடந்த ஒராண்டாக நடந்தது. கடந்த 30ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை 8மணியளவில் ஸ்ரீ மகாசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அரியலூர் அண்ணாநகர் செல்வமுத்துக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தி சிரத்தையுடன் நடந்த இக்கும்பாபிஷேக விழாவில், அரியலூர் தாசில்தார் முத்துவடிவேல், தியாகி நாராயணசாமி பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் துரை அர்ச்சுணன், செயலாளர் திருமூர்த்தி, பொருளாளர் அசோக்குமார், பாலசுப்ரமணியன், அரியலூர் நகராட்சி தலைவர் முருகேசன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் கணேசன், முன்னாள் நகராட்சி தலைவி விஜயலெட்சுமி செல்வராஜ், அரியலூர் மாவட்ட புதுவாழ்வு திட்ட அலுவலர் ஸ்ரீதரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முகுந்தன், தொழிலதிபர்கள் பனங்கூர் கணேசன், ரைஸ் மில் கோவிந்தராஜ், மாரிமுத்து, ஜூவல்லரி ஷாப் கணேசன், டாமின் ரகுபதி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !